நன்றி நவிழல்..!!வீட்டு இணைய இணைப்பிற்கு விடுமுறை..

0 comments

இன்றுடன் எனது பதிவுகளுக்கு தற்காலிக விடுமுறை..இத்துடன் என் வீட்டு இணைய இணைப்பிற்கு நன்றி..மீண்டும் இணையத்தில் இணைய நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் இடுகிறேன்..நன்றி..வணக்கம்..

மொழி விவசாயி!

0 comments
சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தால் போதும். தமிழகத்தின் ஏதோ ஒரு நகருக்கு, ஏதோ ஒரு கிராமத்துக்கு அவர் பேருந்து ஏறிவிடுவார். இல்லையேல் புதுவைக்கு அருகிலிருக்கும் ஏதாவது பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள்.


யார் இவர்?

எந்த அமைப்பின் பின்புலமுமின்றி தனிமனிதராக தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வரும் முனைவர் மு.இளங்கோவன். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிகிறார். நாற்பத்தி மூன்று வயது.

மாணவர்களை சந்தித்து இணையத்தில் தமிழை பரவலாக்குவதை தன்னார்வத்தோடு தனிநபர் இயக்கமாகவே செய்துவரும் இவரது பின்னணிக் கதையும் சுவாரஸ்யமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் உருவாக்கிய வெற்றி நகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகிலிருக்கும் இடைக்கட்டு கிராமத்தில் பிறந்தவர் இளங்கோவன். படிப்பறிவு இல்லாத குடும்பம். பெற்றோர் விவசாயிகள். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாம். இவரது முன்னோர் ஒரு காலத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலத்தை கட்டி ஆண்டவர்கள். வெள்ளையர் காலத்தில் அப்பகுதியில் பொன்னேரி என்ற பெயரில் செயற்கை ஏரி ஒன்று உருவாக்கப்பட்ட போது இவர்களது நிலங்களை அரசு எடுத்துக் கொண்டது.

மிச்சமிருந்த சொச்ச நிலங்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் இளங்கோவன் குடும்பத்தினர். பரம்பரை பரம்பரையாக செல்வத்தில் கொழித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் கல்வியின் அவசியம் யாருக்கும் தெரியவில்லை. இளங்கோவனின் பெற்றோர் முதன்முதலாக தங்கள் மகனுக்கு கல்வி போதிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்கள்.

அருகிலிருந்த உள்கோட்டை கிராமப் பள்ளிக்கு இளங்கோவனை கல்விகற்க அனுப்பி வைத்தார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தவர் மேல்நிலைக் கல்விக்காக மீன்சுருட்டி கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. தினமும் 13 கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளிக்கு செல்வார் இளங்கோவன். மாலையில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள்.

+2வில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. இருந்தாலும் தங்களது மகன் +2 வரை படித்ததே பெரிய விஷயம் என்று பெற்றோர் எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானதாகவும் இருந்தது. இரண்டு மாடு வாங்கி கொடுத்து, மகனை விவசாயம் செய்ய சொன்னார் தந்தை முருகேசன்.

மூன்று வருடங்கள் விவசாயமே எதிர்காலம் என்று உழைத்தார் இளங்கோவன். அவ்வப்போது அருகிலிருக்கும் நகருக்கு செல்வார். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை சீசன்களில் நகரிலிருக்கும் துணிக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிபுரிவார். தமிழார்வம் கொண்ட இளங்கோவன் ‘தென்மொழி’போன்ற இலக்கிய இதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

ஒருமுறை துணிக்கடைக்கு வந்த தமிழாசிரியர் ஒருவர் இவரது கையில் இருந்த தென்மொழியை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். அவர் வாழ்நாளில் துணிக்கடையில் பணி செய்யும் ஒருவரின் கையில் தீவிர இலக்கிய இதழை கண்டதேயில்லை. ஆச்சரியப்பட்டு இளங்கோவனின் பின்னணியை விசாரித்திருக்கிறார்.

“தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் வரலாம்” என்று அறிவுறுத்தி நெறிப்படுத்தினார். அவரது வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசி திருமடம் நடத்திய செந்தமிழ் கல்லூரியில் தமிழ் படிக்கச் சென்றார் இளங்கோவன்.

மகன் என்ன படிக்கிறான், அதை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் அவரது பெற்றோருக்கு தெரியாது. பட்டம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதுமே வீட்டில் இருந்த எதையோ விற்று காசு கொடுத்து அனுப்பி வைத்தார் அப்பா.

அங்கே இளங்கலை படிக்கும்போது தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ள ஆரம்பித்தார். ஆய்வுக்கட்டுரைகளாக எழுதித்தள்ளி பல்வேறு ஆராய்ச்சிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களாக வென்று குவித்தார். திருப்பனந்தாள் மட நிர்வாகம் இளங்கோவனை ஊக்கப்படுத்திக் கோண்டே இருந்தது. அங்கேயே முதுகலையையும் முடித்தார்.

முதுகலை முடித்த பின்னரும் கூட உயர்கல்வி பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ இளங்கோவனுக்கு ஏதும் தெரியாது. மதுரை இளங்குமரன் என்ற தமிழறிஞரிடம் குருகுல வாசம் செய்து, தமிழ் கற்க முடிவெடுத்தார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழறிஞர்கள் குருகுலவாசம் மூலமாகவே தமிழ் கற்றார்கள். அந்த அடிப்படையில் மரபுத்தமிழில் பயிற்சிபெற குருகுல வாசமே சிறந்த்து என்று இளங்கோவன் எண்ணினார்.

இந்த காலக்கட்டத்தில் தூயதமிழில்தான் இளங்கோவன் பேசுவார். அவரது நடை உடை பாவனைகள் நூற்றாண்டுக் காலத்துக்கு முந்தைய தமிழறிஞர்களை ஒத்த்தாக இருக்கும். கேலி, கிண்டல்கள் பற்றி இளங்கோவன் கவலைப்படுவதேயில்லை.

அப்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு நாளிதழில் கண்டு விண்ணப்பித்தார். பேராசிரியர் க.ப.அறவாணன் தலைமையிலான தமிழியல் துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’எனும் தலைப்பில் ஆய்வுசெய்து இளம் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்பட்ட ஆய்வினையும் நிறைவுசெய்தார்.

மாணவப் பருவத்தில் இருந்தபோது இவர் எழுதிய மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீர்ர் வெ.துரையனார் அடிகள் முதலான நூல்கள் வெளிவந்தன.

ஒருவழியாக கல்வி, முனைவர் பட்டம் எல்லாம் முடிந்தது. அடுத்து?

தமிழ்நாட்டின் எல்லா பட்டதாரி இளைஞர்களைப் போலவே இளங்கோவனும் சென்னைக்குப் படையெடுக்கிறார். சென்னையின் பிரம்மாண்டம் அவரை தன்னுள் விழுங்கிக் கொள்கிறது. திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்று இளங்கோவனுக்கு ஆர்வம் அதிகம்.

ஏனெனில், நாட்டுப்புறப் பாடல்களில் நிறைய ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஒப்பாரிப்பாடல், நடவுப்பாடல்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கில் சேகரித்து ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். நம் மண்ணின் வரிகளை வெள்ளித்திரையில் ஒலிக்கச் செய்யவேண்டுமென்பது இளங்கோவனின் ஆசை.

தமிழை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு சரணாலயம் கவிஞர் அறிவுமதியின் அறை. இளங்கோவனும் அவரது அறையில்தான் தங்கியிருந்தார். அறிவுமதிக்கு இளங்கோவன் திரைத்துறைக்கு செல்வதில் விருப்பமில்லை. “தமிழில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிகக்குறைவு. தமிழறிஞர்களும் சினிமாவுக்குப் போய்விட்டால் யார்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?” என்று இளங்கோவனிடம் அக்கறையோடு கூடிய கண்டிப்பு காட்டினார்.

தமிழ் மட்டுமே தெரிந்த இளங்கோவனுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளர் பணி கிடைத்தது. அதுவும் தற்காலிகப் பணியே. ‘தமிழியல் ஆவணம்’ என்ற திட்டப்பணியில் ஒரு ஆண்டு பணிபுரிந்தார். ஒப்பந்தம் முடிந்ததும் மறுபடியும் குருகுல வாசம். இம்முறை இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நூல் வெளிவர அவரிடம் ஓராண்டு உதவியாளராகப் பணி.

பேச்சும், மூச்சும், வாழ்வும் தமிழாகவே கழிந்துகொண்டிருந்தது இளங்கோவனுக்கு. வருமானத்தை தவிர எல்லாமே கிடைத்தது அவருக்கு. என் தமிழ் என்னை கைவிடாது என்ற நம்பிக்கையோடு மட்டுமே வாழ்வை அணுகிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் வென்றதுமே வாழ்க்கை இவருக்கு வசப்பட்டது. இவர் கேட்டதை எல்லாம் தமிழ் வாரி வாரி கொடுத்தது. இன்று புதுவையின் புகழ்வாய்ந்த கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு வாக்கில் இணையம் இவருக்கு அறிமுகமானது. இணையம் உலகத் தமிழர்களை ஓர் புள்ளியில் திரட்டுகிறது என்பதை உணர்ந்தார். குறிப்பாக இளைஞர்களை இணையம் கட்டி வைத்திருக்கிறது. அன்றாட வாழ்வில் தமிழைப் புறக்கணிக்கும் இளைஞர்கள் கூட இணையத்தில் தமிழை கொண்டாடும் நிலையை கண்டார்.

நண்பர்களின் உதவியோடு வலைப்பூ ஒன்றினை உருவாக்கி (http://muelangovan.blogspot.com/) தமிழறிஞர்கள் குறித்த அறிமுகத்தினை தொடர்ச்சியாக பதிய ஆரம்பித்தார். கல்வெட்டுகள் வாயிலாக பழந்தமிழ் அறிஞர்களை குறித்து இன்று அறிகிறோம். இன்று நவீன கல்வெட்டாக செயல்படுவது இணையம்தான். எனவே தமிழுக்காக உழைப்பவர்களை, உழைத்தவர்களை ஆவணப்படுத்த வலைப்பூ இளங்கோவனுக்கு வசதியாக இருக்கிறது.

உலகின் எதிர்காலம் இணையத்தை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று சொல்லப்படும் இக்காலக்கட்டத்தில் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலமாக மொழியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லமுடியும் என்று நம்பினார். ஊர் ஊராகச் சென்று இவர் இன்று இணையத்தமிழை பரப்பும் பணியை செய்துவருவதற்கு இதுவே காரணம்.

அந்தமானில் இருந்து ஒருவர் கூட தமிழில் இணையத்தில் இயங்காத நிலை இருந்தது. சமீபத்தில் அங்கு சென்றிருந்த இளங்கோவன், அங்கிருந்த தமிழர்களிடம் கணியில் எப்படி தமிழை உள்ளிடுவது, இணையத்தில் தமிழ் மூலமாக இயங்குவது போன்றவற்றை கற்றுத் தந்துவிட்டு திரும்பியிருக்கிறார். எல்லா தமிழர்களுக்கும் தமிழ் - இணையம் குறித்த தெளிவு வேண்டுமென்பதற்காக ‘இணையம் கற்போம்’ என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

நாம் விரும்பினாலும் சரி. விரும்பாவிட்டாலும் சரி. எத்துறையாக இருந்தாலும் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கத்தானே செய்யும்?

பல்வேறு அமைப்புகளின் விருதுகளோடு முத்தாய்ப்பாக, இந்திய அரசின் செம்மொழி மத்திய உயராய்வு நிறுவனம் 2006-07 ஆண்டுக்கான ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’இவருக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.

விருதுகளும், பாராட்டுகளும் வரவேற்பறையை அலங்கரிக்க, இன்னமும் திருப்பனந்தாள் மட கல்லூரியில் படித்தபோது இருந்த அதே எளிமையோடே இருக்கிறார் மு.இளங்கோவன். “சட்டையை கழட்டிட்டா இன்னும் நான் விவசாயி தாங்க” வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

புதுச்சேரியில் அவரை சந்தித்தபோது வருத்தம், மகிழ்ச்சி, வியப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகளில் ஆங்கிலம் கலக்காத அழகுத்தமிழில் பேசிக்கொண்டே போகிறார்.

“தமிழ் வளர நம்முடைய கல்விச்சூழலில் மாற்றம் தேவை. தமிழ்வழிக் கல்வியால் மட்டுமே தமிழின் இருப்பை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கும் உறுதி செய்யமுடியும். அதுபோலவே தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையையும் எடுத்துவரவேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தான் செய்யமுடியும்.

தமிழ் என்பது இன்று பட்டிமன்றங்களில் நகைச்சுவை செய்ய பயன்படுகிறது. மக்களுக்கு தமிழ்ச்சுவையை சூடாக, சுவையாக கொடுத்த பட்டிமன்றங்கள் இன்று சில தமிழறிஞர்களாலேயே வணிகமயமாகி விட்டது எத்தகைய அவலம்?

அயல்நாடுகளுக்கு சென்றிருக்கும் நம் தமிழர்கள் எப்படி தமிழ் வளர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால், தமிழ் சினிமாக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அவற்றை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு விற்கிறார்கள்.

தமிழர்களுக்கு தமிழில் நடத்தப்படும் அச்சு ஊடகங்களோ பிழைகளோடு வருகிறது. முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கலப்போடு தமிழ்க்கொலை செய்கிறது. வானொலி, தொலைக்காட்சி தமிழைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை”

”அப்படியானால் தமிழின் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?”

“அப்படியெல்லாம் நாம் அச்சப்பட்டு விட வேண்டாம். இன்று இணையம் இருக்கிறது. இணையம் என்பது இளைஞர்களுக்கு இதயமாக இருக்கிறது. அவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகவோ, கற்பிக்கும் ஊடகமாகவோ மட்டுமில்லை. எனவே இணையத்தில் தமிழை பரவலாக்கினோமானால் அது அடுத்த தலைமுறைக்கு தமிழை சரியாக கொண்டு சேர்க்கும் பணியாக இருக்கும். தமிழறிஞர்கள் தங்கள் எழுதுகோல்களை மூடிவைத்துவிட்டு கணினியை கற்றுக்கொண்டு, கணினியில் தமிழ் பரப்ப முன்வரவேண்டும். தமிழ் வளர்க்க என்னென்ன சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவோ, எதையும் புறக்கணிக்காமல் அத்தனையையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவேதான் கணினியில் தமிழை எப்படி உள்ளிடுவது? இணையத்தில் தமிழை கொண்டுசெல்வது என்று ஊர் ஊராக போய் கற்பித்து வருகிறேன். வளர்ந்தவர்களுக்கு ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ எரிச்சலைத் தரும் என்பதால் மாணவசமுதாயத்துக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் தமிழை வாழவைப்பார்கள்.

இணையம் இவ்வளவு இன்றியமையாதது என்பதால்தான் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டோடு இணையமாநாடும் நடத்தப்படுகிறது. இதனால் இணையத்தமிழ் பயன்பாடு தமிழர்களுக்கு நல்லமுறையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!”

அரியலூருக்கு செல்லும் அவசரத்தில் இருந்தவர் நம்மிடம் கைகுலுக்கி விடைபெறுகிறார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள். பேருந்தை பிடிக்கும் அவசரம். எந்தப் பயணமாக இருந்தாலும் தமிழ் அவருக்கு வழிதுணையாக இருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை,http://www.luckylookonline.com/2010/05/blog-post_24.html)

இவ்விடம் நான் மறைந்த அய்யா வீ.பா.கா.சுந்தரம் அவர்களது உடன் பிறந்த தங்கையின் பேரன் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்..அவரது புகழ் மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்..

0 comments
இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)

அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள்
தமிழிசைக் கலைக்களஞ்சிய ஆசிரியர்
(Dr.V.P.K.SUNDARAM)



தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.தமிழின் இயல் பற்றியபரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும்இசை,கூத்தோடு தொடர்புடைய நாட்டியம் பற்றிய செய்திகளில் முறையே தெலுங்கு,வடமொழியின் சார்புச் செய்திகள் புனைந்துரைக்கப்பட்டன.தமிழிசை பற்றியும்,நாட்டியம் பற்றியும் தமிழக அறிஞர்கள் சொன்ன செய்திகள் யாவும் கவனிப்பாரின்றிப் போயின.


அத்தகு நிலையில் ஆபிரகாம்பண்டுவர் அவர்கள் தமிழிசைக்கு என உழைத்து உருவாக்கிய கருணாமிருத சாகரம் என்னும் நூல் இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை வளர்ச்சிக்கு மிகப்பெரிய வித்திட்டது.இந்நூலைத் தொடர்ந்து தமிழிசை இயக்கமும்,தமிழிசை ஆய்வுகளும் தமிழகத்தில் இசை மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தன.இத்தகு தமிசை ஆய்வுக்கெனத்தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பிறமொழி இசை ஆதிக்கத்தை ஒற்றை மாந்தராக எதிர்த்ததுடன் தமிழிசைக்கு அரணாகப் பழந்தமிழ்இசை உண்மைகளைக் கண்டுரைத்தவர் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் ஆவார்.இவர்தம் தமிழிசை வாழ்வையும்,ஆராய்ச்சி நூல்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.



வீ.ப.கா.சுந்தரம் இளமைப்பருவம்


மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகே உள்ள கோம்பை என்னும் ஊரில் 05.09.1915 இல் பிறந்தவர்.பெற்றோர் வீ.பரமசிவம்பிள்ளை,காமாட்சி ஆகியோராவர்.இளமையில் நாடகம் பார்ப்பதில் நாட்டம்கொண்டவர்.பாடல்கள் பாடுவதில் வல்லவர்.பட்டப்படிப்பு முடித்தபின் மதுரையில் பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அங்கிருந்து ஓய்வுபெற்றபின் மதுரையிலுள்ள அரசரடி இறையியல் கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும்,கருவிஇசையும் பயிற்றுவித்தார்.மதுரை பசுமலையில் இருந்த தம் ஞானசம்பந்தர் மனையில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான்.தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்.இவர் மதுரை காமராசர்பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.


மதுரைப் பசுமலையில் வாழ்ந்தபொழுது நாவலர் சோமசுந்தரபாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது.அவர்தம் தொல்காப்பியம் குறித்த நூலிலிருந்த பிழைகளைப் பட்டியலிட்டுச் சென்றதாகவும் அவற்றைக் கண்ட நாள்முதல் தம்மீது நாவலருக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டதையும் வீ.ப.கா.சுந்தரம் அடிக்கடி கூறுவார்.தமிழின் ஆழ்ந்த புலமைபெற நாவலரின் தொடர்பே காரணம் என்பார்.ஐந்தாண்டுகள் அவரிடம் தொல்காப்பியத்தையும்,சங்க இலக்கியத்தையும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். மதுரையில் வாழ்ந்த சி.சங்கரசிவனார் என்னும் இசையறிஞரிடம் இசையியல்,காலக்கணக்கியல்,கஞ்சிரா முழக்கம் பற்றிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாடம் கேட்டவர்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் அவருக்கு எங்கும் ஓய்வுஊதியமோ, பொருந்திய ஊதியமோ கிடைக்கவில்லை.பற்பல ஊர்களில் நடைபெறும் இசை ஆய்வரங்குகளில் உரையாற்றியும், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தும் தம் இசை ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசைஆய்வுஅறிஞராகப் பணிபுரிந்தார்.தாம் பல காலமாக எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்துத் தமிழிசைவளம் என்னும் பெயரில் நூலாக்கினார்.பல்கலைக்கழக வெளியீடாக அந்நூல் வெளிவந்தது.


தருமையாதீன நிகழ்ச்சியொன்றில் அந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் ச.முத்துக்குமரனாரைக் கண்டதாகவும் அவர்தம் விருப்பப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்(1988-2000) பணிபுரிய வாய்ப்பு அமைந்ததையும் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுவதுண்டு.


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியேற்றது முதல் அவர் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஆய்வுசெய்து கண்ட முடிவுகளை நான்கு தொகுதிகளாகத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் வெளியிட்டார்.பன்னிரண்டு ஆண்டுகள் முயன்று இந்நான்கு தொகுதிகளும் வெளிவந்தன.எனினும் இத்தொகுதிச் செய்திகள் யாவும் ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கும் மேலான உழைப்பாகவும்,கண்டுபிடிப்பாகவும் கொள்ளுதல் தகும். மொத்தம் 2232 தலைமைச் சொற்கள் இக் கலைக்களஞ்சியத்தில் மயக்கமற விளக்கப்பட்டுள்ளன.இன்னும் பல ஆயிரம் கிளைச்சொற்களும் போகிறபோக்கில் இசைமேதை அவர்களால் விளக்கப்பட்டுள்ளதைத் தமிழிசை வல்லார் உணர்வர்.இந்தியாவிலும்,தமிழகத்திலும் வெளிவந்துள்ள இசைக் கலைக்களஞ்சியங்களில் இந்நூலே மிகப்பெரிய நூலாகும்.

வீ.ப.கா.சுந்தரம் பாரதிதாசன்பல்கலைக்கழகத்தில் களஞ்சியப்பணி நிறைவுற்றதும் மதுரையில் பசுமலையில் அமைந்த அவர்தம் ஞானசம்பந்தர் மனையில் இசையாய்வுகள் நிகழ்த்திவந்தார்.இறுதியாக முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் கோட்டத்தில் உரை நிகழ்த்தி வந்த சில நாளில் ( 09.03.2003) இயற்கை எய்தினார்.அவர்தம் தமிழுடல் பசுமலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


தமிழிசைக்கலைக்களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளுள்ளும் இசை,நாட்டியம்,இசைக் கருவிகள்,பாடல் இயற்றியோர் வரலாறு,பண்களின் தோற்றம்,வளர்ச்சி,தாளக் கொட்டு, முழக்குமுறை மிகச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழிசை,நாட்டியம் குறித்த செய்திகளை,விளக்கங்களைத் தர வீ.ப.கா.சுந்தரம் பல்வேறுபடங்கள், கட்டகங்கள், ஓவியங்கள்இவற்றைப்பயன்படுத்தியுள்ளார்.


இசைவல்லார் இன்று பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களுக்கு வீ.ப.கா.சுந்தரம்அவர்கள் பலநூறு தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடித்துள்ளார்.தமிழ்க் கலைச்சொல் வரலாற்றிலும்,வேர்ச்சொல்லாய்விலும் இவருக்குத் தனித்த இடம் உண்டு. தமிழிசைக் கலைக் களஞ்சியத்திற்குத் தமிழின் முதல்நூலான தொல்காப்பியம் தொடங்கி சங்கநூல்கள், சிலப்பதிகாரம்,காரைக்காலம்மையார் பாடல்கள்,பக்திப்பனுவல்கள்,பெரியபுராணம்,பிற்கால நூல்கள்,தெலுங்கு,வடமொழி நூல்கள்.உலகநாடுகளின் இசைகுறித்த நூல்கள் யாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு நம் வீ.ப.கா.சுந்தரம் விளக்கம் தந்துள்ளார். இதுநாள்வரை விளக்கம் பெறாமல் இருந்த பல்வேறு இசைக்கலைச் சொற்களைப் பல்லாண்டு பட்டறிவால் விளக்கிச் சென்றுள்ளமையை எதிர்காலத் தமிழகம் போற்றிச் சொல்லும்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நூல்கள்:


1.தமிசைவளம் (1985) ம.கா.பல்கலைக்கழகம்

2.பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்(1986) கழகம்

3.மத்தளவியல்(Art Of drumming),(1988 ) ஆசியவியல் நிறுவனம்

4.அருட்குறள்

5.பைந்தமிழ்ப் பயிற்று முறை

6.இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல்

7.சிறுவர் இன்பம்

8.பஞ்சமரபு(1991) கழகம்

9.தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்(1994) உ.த.நி

10.பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல்(1995), செல்வி பதிப்பகம்

11.ஆளுடைய பிள்ளையாரும் அருணகிரியாரும்

12.தமி ழிசைக் கலைக்களஞ்சியம்

முதல்தொகுதி (1992)

இரண்டாம் தொகுதி (1994)

மூன்றாம் தொகுதி (1997)

நான்காம் தொகுதி (2000) பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியீடு.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசைத்துறைப் பங்களிப்பு


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையை மறவாத இசைவாணர்.தன் கைவிரல்கள் எந்த நேரமும் தொடைப் பகுதியில் தாளம் முழக்கிக் கொண்டிருப்பதை அருகில் இருந்தார் அறிவர்.விழிப்பு,வினைப்பாடுகள்,ஓய்வு,உறக்கம் எல்லா நிலைகளிலும் இசை,கூத்துப் பற்றிய நினைவில் இருப்பார்.புல்லாங்குழல் இசைப்பதில் வல்லுநர். புல்லாங்குழல் தமிழரின் முதல் இசைக்கருவி என்பதும் முல்லைப் பண்ணே முதல் பண் எனவும் நிறுவியவர். முல்லை நிலத்துப் புல்லாங் குழலைக் கிறித்தவ தேவாலயங்களில் இசைக்கத் தொடக்க காலங்களில் இருந்த எதிர்ப்பைத் தன் அறிவால் தகர்த்து வாசித்ததை இசைமேதை அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்.


தாளக் கருவிகளை முழக்குவதில் தனியாத ஈடுபாடு கொண்டவர்.ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அதில் இடம்பெறும் நாட்டியநிகழ்ச்சிகளில் இடம்பெறும் இசைக்கட்டுகளை நுட்பமாகச்சுவைப்பவர். இசையரங்குகளில்,பண்ணாராய்ச்சி மாநாடுகளில் உரையாற்றும் பொழுது எந்தச் சூழலிலும் தம்கருத்தைத் துணிவாக எடுத்துரைக்கும் ஆண்மையர்.இவர்தம் கருத்துகளில் மாறுகொண்டவர்கள் தம்மை மீண்டும் அழைக்கவில்லை என்றாலும் தம்கொள்கையை வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.


பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் நம் வீ.ப.கா.சுந்தரம் அவர்களை நன்கு மதித்துப் போற்றிய பெருந்தகையாளர்.அருட்செல்வரிடத்து மிகுந்த மதிப்புக் கொண்டவர் வீ.ப.கா.சுந்தரம்.பஞ்சமரபு நூலுக்குச் செப்பமான உரைவரையும் ஆற்றல் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு உண்டு என்பதை அறிந்த அருட்செல்வர் அவர்கள் அப்பணியை அவரிடம் வழங்கினார்.அப்பணியை மிகத் திறம்படச் செய்தவர் வீ.ப.கா.சுந்தரம். அருட்செல்வர் நடத்தும் பல்வேறு இராமலிங்கர் பணிமன்ற விழாக்களில் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குப் பெருமை செய்யும் வகையில் உரையாற்ற வாய்ப்பு நல்குவார்.ஆனால் தமக்கு இத்தகு வாய்ப்பினை அருட்செல்வர் வழங்குவதால் அவர்தம் கொள்கைகளை வீ.ப.கா.சுந்தரம் ஏற்றுக் கொண்டாரில்லை. வடமொழிச்சார்புக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்ப்பதாக வீ.ப.கா.சுந்தரம் அருட்செல்வரைப் பற்றிக் கூறும்பொழுது கூறுவார்கள்.கருத்துநிலையில் இருவரும் வேறுபடுவார்களே தவிர ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுவதில் நிகரின்றி விளங்கினர்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பெற்ற சிறப்புகள்


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசையாய்வுகளை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குச் சிறப்புச்செய்துள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இலங்கிய முத்தையா செட்டியாரின் பிறப்புமங்கல பரிசிலான உரூவா ஐம்பதாயிரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.சென்னைப் பண்ணாய்வு மன்றக் கூட்டங்களில் ஏழு ஆண்டுகள் இவர் ஆற்றிய உரைப்பொழிவுகள் விழாமலரில் இடம்பெற்றுள்ளன.


அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் மூவர்தேவார இசைவிழாக்களில் வாய்ப்பு நல்கியுள்ளார்.பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சிறுவர் இன்பம் என்னும் வீ.ப.கா.சுந்தரம் நூலுக்கு வழகியுள்ள அணிந்துரையில் இவரை அறிஞர் எனவும் தம் நண்பர் எனவும் போற்றியுள்ளார்.வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசை ஆய்வில் மதிப்புவைத்த அமெரிக்காவாழ் தமிழர்கள் இவரை அமெரிக்க நாட்டிற்கு அழைத்துச் சிறப்புச்செய்துள்ளனர்.அமெரிக்கா முதலான நாடுகளுக்குச் சென்றபொழுது அங்குள்ள இசைக்கருவிகள்,இசையமைப்பு முறைகள் முதலானவற்றைக் கற்றுவந்து தம் ஆய்வுநூல்களில் அவ்வறிவுச் செல்வங்களை வழங்கியுள்ளார்.பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவரை அழைத்துத் தமிழிசை அறிவுச் செல்வத்தைப் பெற்றன.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நெஞ்சில் நின்றவர்கள்


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வாழ்க்கை ஆய்வுவாழ்க்கை.எனவே தம் குடும்பப் பணிகளைவிட ஆய்வுப்பணிகளில் மூழ்கிக்கிடந்தவர்கள். தம் நெஞ்சில்சிலகொள்கைகளைவைத்திருந்தார்.சில
புதிய கண்டுபிடிப்புகளை வைத்திருந்தார்.இவற்றோடு உடன்படுவோரை மேலாக மதித்தார்.தம் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியான அறிஞர்களைக் கடவுளாகவே எண்ணி மதித்தவர்.தாம் ஒரு கிறித்தவராக இருந்தும் தம் இல்லத்திற்குத் தமிழிசை முன்னோடிகளில் ஒருவரான தாளவேந்தர் என வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் போற்றப்பட்ட ஞானசம்பந்தர் பெருமானின் பெயரினைத்தம் மனைக்கு வைத்திரந்தார்.அதுபோல் இசையாய்வு முன்னோடிகளான தமிழிசை மூவர்களான அருணாசலக் கவிராயர்.மாரிமுத்தா பிள்ளை,முத்துத்தாண்டவர் ஆகியோரைத் தம் எழுத்துகளில் உயர்வாகப்போற்றி எழுதியுள்ளார்.


தமக்குப்பணி வழங்கித் தமிழிசைக் கலைக்களஞ்சியம் உருவாக்க காரணமாக அமைந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் முனைவர் ச.முத்துக்குமரனார்,முனைவர் வீர.முத்துக்கருப்பன்,முனைவர் பெ.செகதீசன்.முனைவர் சி.தங்கமுத்து ஆகியோரை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் எஞ்ஞான்றும் மறந்தாரில்லை. அதுபோல் அறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் தமிழண்ணல் பேராசிரியர் சீத்தா முதலானவர்களையும் மதித்தவர்.திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வ.சுப்பையாபிள்ளை, இரா.முத்துக்குமாரசாமி ஆகியோரையும் நன்கு மதித்தார்.மருத்துவர் இரா.கலைக்கோ வனிடத்து வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு நல்ல பற்றுமை இருந்தது.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் வழியில் இசையாய்வை இன்று நிகழ்த்துபவர்கள் முனைவர் அரிமளம் பத்மநாபன்,மதுரை மம்முது, நிர்மல்செல்வமணி.செ.அ.வீரபாண்டியன் முதலானவர்கள்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையாய்வு குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.பல கட்டுரைகளை வரைந்துள்ளார்.பல ஆய்வரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.இன்னும் பல நூல்களை எழுதத் திட்டமிட்டிருந்தார்.அவற்றுள் யாழ்பற்றிய நூலொன்று அவர் உள்ளத்தில் கருக்கொண்டிருந்தது.அது வெளிவராமல் போனது தமிழர்களின் போகூழேயாகும்.எனெனில் ஒருமாலைப்பொழுதில் யாழ்பற்றிய பேச்சு வந்தது.மறுநாள் அவ் யாழ்பற்றிய கட்டுரையுடன் ஐயாஅவர்கள் வந்தமை எளியேனை வியப்படையச் செய்தது. தொல்காப்பியம், சங்க
நூல்களில் இடம்பெறும் யாழ்குறித்த அனைத்துச் சொற்களையும் திரட்டி உருவம் கொடுத்திருந்தமையும் யாழ்நூலாரினும் புதிய உண்மைகள் சில இடம்பெற்றிருந்ததையும் அந்நாளில் கண்ட நினைவுகளுடன் இச் செய்தியைப் பதிவு செய்கிறேன்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன.நூல்வடிவம் பெறாமல் பல்வேறு ஏடுகளில் சிதறிக்கிடக்கும் அவர்தம் கட்டுரைகள் தொகுக்கப் பெறுவதும்,நூலுருவம் பெறுவதும் காலத் தேவையாகும்.ஏனெனில் இக்கட்டுரைகளில் பல்வேறு உண்மைகள் பொதிந்திருக்கக் கூடும். வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தாமே பாடுதுறையை அறிந்தும்,கருவியிசையை அறிந்தும்,தாளம் பற்றிய பேரறிவு கொண்டும்,தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்லபயிற்சி கொண்டும், வேர்ச்சொல்லாய்வில் தோய்ந்தும்,உலக இசைபற்றிய அறிவுகொண்டும், பயிற்றுவித்தலில் நற்றிறம் கொண்டும் விளங்கியதால் இவர்தம் களஞ்சியப்பணிக்கு நிகரான வேறொருவரின் உழைப்பை இசைத்துறையில் ஒப்புமைகாட்ட இயலாதவர்களாக உள்ளோம்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் சில இசையாய்வு முடிவுகள்


சிலப்பதிகாரப் பதிகவுரையை ஆய்வாளர்கள் முழுமையாக ஆராயாததால் பல்வேறு குழப்பங்கள் இசையாய்வுகளில் ஏற்பட்டுள்ளன. இப்பதிக உரையை முழுமையாக வீ.ப.கா.சுந்தரம் விளக்கியுள்ளார். பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்து நிலங்களுக்கும் உள்ள இசையை இளங்கோவடிகள் தம் நூலில் குறிப்பிட்டுள்ளதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துக் காட்டியுள்ளார்.அவை : 1.முல்லையாழ், 2.குறிஞ்சியாழ், 3.மருதயாழ், 4.நெய்தல்யாழ் 5.சுடுபாலை. இவற்றின் இன்றைய பெயராக அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி, சங்கராபரணம் உள்ளதைதையும் வீ.ப.கா.சுந்தரம் கண்டுகாட்டியுள்ளார். பழங்காலத்தில் யாழ் என்றும்,பின்னர்ப் பாலை என்றும் இன்று மேளகர்த்தாராகம் என்றும் இசை வழங்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகளுக்கும் தலைமையாக விளங்கியது செம்பாலையாகும்.இது அடிப்படைப் பாலையாகவும் இருந்தது. இது சங்க காலத்தில் முல்லையாழ்(பெரும்பண்) என்னும் பெயரினைப் பெற்றிருந்தது. தலைமைச் சிறப்பால் பாலையாழ் எனவும் அழைத்தனர். பின்பு செம்பாலை எனப் பெற்றது. இன்று அரிகாம்போதி என்பது பண்டு செம்பாலை எனப்பட்டது. சிலம்பின் ஆய்ச்சியர்குரவையில் செம்பாலையை உரையாசிரியர்கள் அரிகாம்போதியின் நரம்புகளை உடையது எனத் தெளிவூட்டியுள்ளனர்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பழந்தமிழ் நூல்களில் பொதிந்துகிடக்கும் இசையுண்மைகளை வெளிக்கொண்டு வந்ததுடன் இசையறிஞர்கள் தந்திருந்த சில தவறான விளக்கங்களையும் தம் நுண்ணறிவால் தெளிவுப்படுத்தியுள்ளார்.பஞ்சமரபு நூலுக்கு அவர் வரைந்த நுண்ணுரை
பல்வேறு புதிய இசையுண்மைகளை இசைத்துறைக்கு வழங்கியுள்ளது. இதுநாள்வரை விளக்கப்படாமல் இருந்த வரிக்கூத்தின் குலம் விளக்கம் பெற்றமை,யாழ் என்ற இசைக்கருவி காலந்தோறும் மாறிய விதத்தை விளக்கியுள்ளமை, காரைக்காலம்மையார், திருஞான
சம்பந்தர்,திருநீலகண்ட யாழ்ப்பாணர்,சேக்கிழார்,அருணகிரியார் முதலானவர்களின் இசைத்தொண்டினை நினைவு கூர்ந்துள்ளமை, விளக்கியுள்ளமை இவரின் பெரும்பணியாகக் கொள்ளலாம். இசைத்துறையில் பல்லாயிரம் தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தமை,நாட்டிய முத்திரைகளை விளக்கியுள்ளமை,அரங்கேற்று காதையைவிளக்கியுள்ளமை என இவர்தம் தமிழிசைப் பணியைப் பட்டியலிடலாம்.

சிலப்பதிகாரப் பதிகத்திற்கு அடியார்க்குநல்லார் வரைந்து காட்டியுள்ள உரை முறையில் பண்டைத்தமிழின் இசையிலக்கண முறை உள்ளதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் முதன்முதல் கண்டுகாட்டியுள்ளார்.தமிழர்கள் பண்டைக்காலத்தில் இசை,நாட்டியம்,கூத்துக்கலையில் வல்லவர்கள் என்பதைப் பழந்தமிழக இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ இவர்தம் நூல்கள் அடிப்படைச் சான்றாதாரங்களாக விளங்குகின்றன.

நன்றி : திண்ணை இணைய இதழ் 13.09.2007

Hospital Management System - My project in BCA

0 comments
My project in BCA is uploaded in scribd.com.The embedded view of my project is given below.U can refer this project and also download too.

Hospital Management System

Rakta Charitra (2010) Tamil Trailer - Rattha Charithram - Vivek Oberoi , Surya , RAM GOPAL VARMA

0 comments
Rakta Charitra (2010) Tamil Trailer - Rattha Charithram
Cast: Vivek Oberoi, Surya Sivakumar, Priyamani, Radhika Apte, Shatrughan Sinha , Kota Srinivas Rao , Tanikella Bharani

Director: Ram Gopal Varma
Producer: Madhu Mantena, Sheetal Vinod Talwar
Music Director: Mani Sharma

Upcoming matches - Quarter-finals:FIFA world cup 2010

0 comments
Netherlands vs. Brazil - 2 Jul 7:30pm (India Time)
Uruguay vs. Ghana - 3 Jul 12:00am (India Time)
Argentina vs. Germany - 3 Jul 7:30pm (India Time)
Paraguay vs. Spain - 4 Jul 12:00am (India Time)

Shakira - Waka Waka (This Time for Africa) lyrics

0 comments
Oooeeeeeeeeeeeeeeeehh

You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
Get back in the saddle

You're on the front line
Everyone's watching
You know it's serious
We are getting closer
This isn't over

The pressure is on
You feel it
But you got it all
Believe it

When you fall get up, oh oh
If you fall get up, eh eh
Tsamina mina zangalewa
Cuz this is Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Listen to your God
This is our motto
Your time to shine
Don't wait in line
Y vamos por todo

People are raising
Their expectations
Go on and feed them
This is your moment
No hesitations

Today's your day
I feel it
You paved the way
Believe it

If you get down get up, oh oh
When you get down get up, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Awela Majoni Biggie Biggie Mama One A To Zet
Athi sithi LaMajoni Biggie Biggie Mama From East To West
Bathi . . . Waka Waka Ma Eh Eh Waka Waka Ma Eh Eh
Zonke zizwe mazi buye
Cuz this is Africa

Voice: Tsamina mina, Anawa a a
Tsamina mina
Tsamina mina, Anawa a a

Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
Anawa a a
Tsamina mina, eh eh
Waka waka, eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a

Django eh eh
Django eh eh
Tsamina mina zangalewa
Anawa a a

(2x) This time for Africa

(2x) We're all Africa